அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQS)

உங்கள் கடன் தேவைகளை பற்றி எங்களிடம் கூறுங்கள்

என் குடியுரிமை நிலை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்கள் வீட்டுக் கடன் தகுதி வரம்பு -ஐ பெரும்பாலும் நாங்கள் உங்களது வருமானம் மற்றும் திருப்பிச் செலுத்தல் திறனைப் பொறுத்தே தீர்மானிப்போம். உங்கள் வயது, தகுதி, உங்களைச் சார்ந்திருப்போர் எண்ணிக்கை, உங்கள் துணைவரின் வருமானம் (ஏதேனும் இருந்தால்), சொத்துகள் மற்றும் பொறுப்புகள், சேமிப்பு வரலாறு மற்றும் வேலையின் நிலைத்தன்மை & தொடர்ச்சி ஆகிய முக்கிய காரணிகளும் உள்ளடங்கும்.

EMI ஆனது ‘சமமான மாதாந்திர தவணை’ என்பதை குறிக்கிறது, இது கடனை திருப்பிச் செலுத்தும் வரை ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை. EMI ஆனது அசல் தொகை மற்றும் வட்டி தொகையை உள்ளடக்கியது. உங்கள் கடன்களின் ஆரம்ப ஆண்டுகளில், வட்டி கூறானது அசல் தொகையை விட மிக அதிகமானதாகவும், அதே நேரத்தில் கடனின் இரண்டாவது பாதியில், அசல் தொகை மிக அதிகமானதாக இருக்கும்படியும் இது அமைக்கப்பட்டுள்ளது.

‘சொந்த பங்களிப்பு' என்பது சொத்தின் மொத்த மதிப்பில் இருந்து எச் டி எஃப் சி-யின் வீட்டு கடனை கழித்த மதிப்பு ஆகும்.

உங்கள் வசதிக்கேற்ப, வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதற்குப் பல்வேறு வகையான முறைகளை எச் டி எஃப் சி வழங்குகிறது. ECS (எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம்) மூலம் தவணைகளை செலுத்த உங்கள் வங்கியிடம் நீங்கள் ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷனை வழங்கலாம், உங்கள் சம்பள கணக்கிலிருந்து மாதந்தோறும் தவணைகளை நேரடியாக செலுத்தலாம் அல்லது உங்கள் சம்பள கணக்கிலிருந்து பிந்தைய தேதியிட்ட காசோலைகள் மூலமாகவும் தவணைகளைச் செலுத்தலாம்.

நீங்கள் ஒரு சொத்தை வாங்க அல்லது வீட்டை கட்ட தீர்மானித்த உடனே கடனுக்காக விண்ணப்பிக்கலாம், நீங்கள் சொத்தை தேர்ந்தெடுக்கவில்லை மற்றும் வீடு கட்டுவதை தொடங்கவில்லை என்றாலும் கூட விண்ணப்பிக்கலாம்.

சந்தை மதிப்பு என்பது நடப்பிலிருக்கும் சந்தை நிலவரங்களின் கீழ் சொத்தானது பெற்று கொடுக்கும் என எதிர்பார்க்கப்படும் தோராயமான தொகையாகும்.

நீங்கள் ஒரு விண்ணப்ப படிவத்தை அருகாமையிலுள்ள எங்கள் கிளையிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது எங்கள் வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதை ஆதரவு ஆவனங்கள் மற்றும் பிராசசிங் கட்டண காசோலை இவைகளுடன் நீங்களே உங்களுக்கு வசதியான எந்தவொரு எச் டி எஃப் சி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம். மாற்றாக உலகின் எந்த பகுதியிலிருந்தும் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யும் வசதியும் உங்களுக்கு கிடைக்கிறது. இதற்காக ‘உடனடி வீட்டு கடன்’ என்ற பகுதியை எங்கள் வலைதளத்தில் கிளிக் செய்யுங்கள் மற்றும் கூடவே உங்கள் வீட்டு கடன் தகுதியை பற்றியும் உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்.

ஆம். வருமான வரி சட்டம், 1961 இன் கீழ் உங்கள் வீட்டு கடனின் அசல் மற்றும் வட்டி பகுதிகளின் மீது உங்களுக்கு வரி சலுகைகள் கிடைக்கும். இச்சலுகைகள் ஆண்டு தோறும் மாறுவதால் உங்கள் கடன் ஆலோசகரை உங்கள் கடன் மீதான வரி சலுகைகளை பற்றி கலந்தாலோசிக்கவும்.

கடனின் பாதுகாப்பு பொதுவாக எங்களால் நிதியளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எங்களுக்குத் தேவைப்படும் வேறு எந்த இணை / இடைக்கால பாதுகாப்பாக இருக்கும்.

சொத்தின் உரிமம் தெளிவாக, விற்க கூடியதாக மற்றும் வில்லங்கம் எதுவுமில்லாமல் இருப்பதை உறுதி செய்வது மிக முக்கியமாகும். ஏற்கனவே எந்த அடமானம், கடன் அல்லது வழக்கு எதுவுமில்லாமல் இருத்தல் வேண்டும் ஏனெனில் இவைகள் சொத்துரிமத்தை மிகவும் பாதிக்ககூடும்.

அசலை திரும்ப செலுத்துவது உங்கள் முழு கடன் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதத்திற்கு அடுத்த மாதத்திலிருந்து தொடங்கும். முழு கடன் வழங்கப்படும் வரை பெற்றுக்கொண்ட பகுதி கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டும். இதற்கு ப்ரீ-EMI வட்டி என பெயர். ப்ரீ-EMI வட்டியானது ஒவ்வொரு மாதமும் கடன் வழங்கப்படும் தேதியிலிருந்து EMI தொடங்கும் வரை செலுத்தப்பட வேண்டும்.

கட்டுமானத்தின் கீழிருக்கும் சொத்துக்களுக்கு எச் டி எஃப் சி ஒரு சிறப்பு ‘படிநிலை’ கடன் வசதியை அளிக்கிறது. இதன் மூலம் வீடு கைவசம் வரும் வரை நீங்கள் செலுத்த விரும்பும் உங்கள் மாத தவணைகளை நீங்களே தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் செலுத்தும் வட்டிக்கு அதிகமான தொகையானது அசல் தொகை செலுத்தியதாக கணக்கிலெடுக்கப்படும். குறிப்பாக நீண்ட கால அளவில் கடன் இருக்கும் போது.இது உங்களுக்கு கடனை விரைவாக செலுத்த உதவுகிறது.

ஒரு சொத்து பரிவர்த்தனையின் ‘விற்பதற்கான ஒப்பந்தம்’ எனப்படுவது ஒரு பத்திர தாளில் நடைமுறை படுத்தப்பட்ட சட்டபூர்வ ஆவணமாகும். இது வாங்குபவர் மற்றும் விற்பவரிடையே ஏற்படும் கருத்தொற்றுமையையும் மற்றும் சொத்தின் விவரங்களான பரப்பளவு, கையகமான தேதி, விலை, மற்றும் இன்னும் பிற தகவல்களை கொண்டிருக்கும்.

பல இந்திய மாநிலங்களில் விற்பதற்கான ஒப்பந்தம் சட்டப்படி பதிவு செய்யப்படவேண்டிய ஒன்றாகும். ஒப்பந்தத்தை ஒப்பந்த தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்குள் உங்கள் சொந்த நலன் கருதி இந்திய பதிவு சட்டம், 1908 இன் கீழ் மாநில அரசால் நியமிக்கப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது நன்மையளிப்பதாகும்.

ஒரு சொத்தின் மீதான வில்லங்கம் என்பது செலுத்தப்படாத கடன்கள் மற்றும் தொகைகள் போன்ற சுமைகள் மூலம் அச்சொத்தின் மீது ஏற்படும் உரிமை கோரல்கள் அல்லது மாற்றியமைத்தல்கள்/பொறுப்புகள் ஆகும். எனவே நீங்கள் வீடு தேடும்போது இவ்வகை வில்லங்கங்கள் இல்லாத ஒன்றை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமாகும்.

ஆம், நீங்கள் ஒரு ‘வீடு மாற்றம் கடன்’ ஐ பெற முடியும். இதன் மூலம் உங்கள் நடப்பு கடனை (தற்போதைய வீட்டை வாங்க நீங்கள் பெற்ற கடன்) புதிய வீட்டின் தவணை தொகைக்கான கூடுதல் நிதிகளுடன் புதிய வீட்டிற்கு மாற்றியமைக்கப்பட முடியும். இது உங்கள் கடன் தகுதியை பொறுத்து அமையும். இதன் மூலம் நடப்பு கடனை அடைத்துவிட்டுதான் புதிய வீட்டிற்கு குடிபெயரலாம் என்ற தொல்லையிலிருந்து உங்களுக்கு விதி விலக்கு கிடைக்கிறது.

ஆம், நீங்கள் வேறொரு வங்கியிடமிருந்தோ அல்லது நீங்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்தோ வாங்கிய வீட்டு கடனை அடைக்க எங்களிடம் ஒரு கடன் விண்ணப்பிக்கலாம். ‘பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்’ பற்றிய மேலும் அதிக தகவல்களுக்கு எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

கட்டுமானத்தின் கீழிருக்கும் சொத்து என்றால் கட்டப்பட்டு கொண்டிருக்கும் மற்றும் வாங்குபவரின் கைவசம் பிறிதொரு தேதியில் வரும் வீடாகும்.

சொத்தானது முறையாக மதிப்பிடப்பட்டு அனைத்து சட்ட ஆவணங்களும் தயாரிக்கப்பட்டு உங்கள் பங்கை முழுமையாக முதலீடு செய்து முடித்த பின் கடன் தொகை உங்களுக்கு வந்து சேரும். எங்கள் அலுவலகத்துக்கு வருகை தந்தோ அல்லது ஆன்லைனில் ‘நடப்பு வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் அணுகல்’ என்ற இணையதளத்தில் உள்நுழைந்தோ நீங்கள் கடனின் பட்டுவாடாவிற்காக விண்ணப்பிக்கலாம்.

வழங்கலுக்கு நாங்கள் விண்ணப்பத்தை பெற்றவுடன் கடன் தொகையை முழுவதுமோ அல்லது மூன்றுக்கு மிகாத தவணைகளாகவோ உங்களுக்கு வழங்குவோம். கட்டப்பட்டு வரும் சொத்து என்றால் கட்டுமானத்தின் முன்னேற்றத்தை பொறுத்து தவணைகளில் வழங்குவோம். இது எங்கள் மதிப்பீட்டின் படியே அமையும், டெவலப்பருடனான ஒப்பந்த படிதான் என்றல்ல. எனவே உங்கள் சொந்த நலம் கருதி டெவலப்பருடன் கால அட்டவணை என்ற ஒப்பந்தமல்லாமல் கட்டுமானத்துடன் தொடர்புள்ள தொகை செலுத்தல்கள் என்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்திகொள்ளுங்கள்.

ஆம், நீங்கள் கடனை தவணைக்காலம் முன்னதாகவே ஒரு மொத்த தொகையை பகுதி அல்லது முழு கடன் தொகையாக செலுத்தி அடைக்கலாம். இதற்கு முன்கூட்டியே கடன் செலுத்தும் கட்டணங்கள் உண்டு. மேலும் நீங்கள் விரைவாக கடனை கட்டி முடிக்க ‘விரைவுபடுத்தப்பட்ட கடன் அடைக்கும் திட்டம்’ என்ற இலவச வசதியையும் நாங்கள் வழங்குகிறோம். இந்த விருப்ப தேர்வானது உங்கள் வருமானத்துக்கேற்றவாறு EMIகளை அதிகப்படுத்தி கொள்ள உதவி கடனை விரைவாக அடைக்க உதவுகிறது.

ஆம், கடன் நடப்பு காலம் முழுதும் உங்கள் சொத்தை தீ மற்றும் மற்ற அபாயங்களிலிருந்து நீங்கள் காப்பீடு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டும். காப்பீடு செய்ய பட்டிருப்பதன் ஆதாரத்தை எச் டி எஃப் சிக்கு ஒவ்வொரு வருடமுமோ அல்லது நாங்கள் கேட்கும் போதோ சமர்பிக்க வேண்டும். அந்த காப்பீட்டு திட்டத்தின் பயனுறுபவர் எச் டி எஃப் சியாக இருத்தல் வேண்டும்.

வருமான வரி சட்டம், 1961, அத்தியாயம் 20 C யின் கீழ் ஒரு குறிப்பிட்ட மதிப்பை தாண்டும் சில அசையா சொத்துக்களை வாங்கும் முதல் உரிமை மத்திய அரசுக்குத்தான் உண்டு. எனவே இவ்வத்தியாயம் விளக்கும் அத்தகைய பரிவர்த்தனைகள் அங்கே பரிந்துரைக்கப்பட்ட தேவைகளை நிறைவேற்றிய பிறகே நிறைவேற்றப்படலாம்.

வேறொரு வங்கி / நிதி நிறுவனத்திலிருந்து பெற்ற உங்கள் நிலுவை வீட்டுக் கடனை எச் டி எஃப் சி-க்கு மாற்றுவது பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கடன் என்று அழைக்கப்படுகிறது.

வேறொரு வங்கி/HFI உடன் ஏற்கனவே வீட்டுக் கடனைக் கொண்ட எந்தவொரு கடனாளியும், அதில் தவறாமல் 12 மாதங்கள் பணம் செலுத்தியதற்கான விவரத்தை கொண்டிருந்தால், எச் டி எஃப் சி-யில் இருந்து பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கடனைப் பெறலாம்.

ஒரு வாடிக்கையாளர் பெறக்கூடிய அதிகபட்ச கால அளவு 30 ஆண்டுகள் அல்லது ஒய்வு பெறும் வயது வரை, எச் டி எஃப் சி-யின் 'டெலஸ்கோப்பிக் திருப்பிச் செலுத்தும் விருப்பத்தின்' கீழ் எது குறைவோ அது பொருந்தும்.

பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கடன்களுக்கு பொருந்தும் வட்டி விகிதங்கள் வீட்டுக் கடன்களின் வட்டி விகிதங்களிலிருந்து வேறுபடுவதில்லை.

ஆம். வருமான வரி சட்டம், 1961. இன் கீழ் உங்கள் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கடனின் அசல் மற்றும் வட்டி பகுதிகளின் மீது உங்களுக்கு வரி சலுகைகள் கிடைக்கும். இச்சலுகைகள் ஆண்டு தோறும் மாறுவதால் உங்கள் கடன் ஆலோசகருடன் உங்கள் கடன் மீதான வரி சலுகைகளை பற்றி கலந்தாலோசிக்கவும்.

முடியும், எச் டி எஃப் சி-யில் இருந்து பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கடனுடன் ₹ 50 லட்சம் வரை கூடுதல் டாப் அப் கடனைப் பெறலாம்.

பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கடனுக்கான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களின் சரிபார்ப்பு பட்டியலை நீங்கள் பின்வரும் இணைப்பில் காணலாம் https://www.hdfc.com/checklist#documents-charges

முடியும், கட்டுமான சொத்தின் கீழ் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் எச் டி எஃப் சி-யில் இருந்து பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கடனை பெறலாம்.

இது டைலிங், ஃப்ளோரிங், உள்புற / வெளிப்புற பிளாஸ்டர் மற்றும் பெயிண்டிங் போன்ற வழிகளில் உங்கள் வீட்டை புதுப்பிப்பதற்கான (கட்டமைப்பு/தரைப்பகுதியை மாற்றாமல்) கடனாகும்.

தங்கள் அடுக்குமாடி குடியிருப்பு/தரை/வரிசை வீட்டைப் புதுப்பித்துக்கொள்ள விரும்பும் எந்தவொரு நபரும் மற்றும் நடப்பு வீட்டுக் கடன் வாடிக்கையாளர்கள் கூட ஒரு வீட்டு மேம்பாட்டுக் கடனை பெற முடியும்.

அதிகபட்சமாக 15 ஆண்டுகள் அல்லது நீங்கள் ஓய்வூ பெறும் வயது வரை, இதில் எது குறைவானதோ அத்தகைய காலவரம்பு வரைக்குமான ஒரு வீட்டு மேம்பாட்டு கடனை நீங்கள் பெற முடியும்.

வீட்டு மேம்பாட்டு கடனுக்கு பொருந்தும் வட்டி விகிதங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களிலிருந்து வேறுபடுவதில்லை.

வீட்டு மேம்பாட்டுக் கடன்களை அசையாத ஃபர்னிச்சர்கள் மற்றும் ஃபிக்சர்கள் (பொருத்தப்பட்ட பொருட்கள்) வாங்குவதற்கான நிதிக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்

ஆம். வருமான வரி சட்டம், 1961. இன் கீழ் உங்கள் வீட்டு மேம்பாட்டின் முதன்மை கூறுகள் மீதான வரி நன்மைகளுக்கான சலுகைகளுக்கு நீங்கள் தகுதியானவர். இச்சலுகைகள் ஆண்டு தோறும் மாறுவதால் உங்கள் கடன் ஆலோசகருடன் உங்கள் கடன் மீதான வரி சலுகைகளை பற்றி கலந்தாலோசிக்கவும்.

கடனின் பாதுகாப்பு பொதுவாக எங்களால் நிதியளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எங்களுக்குத் தேவைப்படும் வேறு எந்த இணை / இடைக்கால பாதுகாப்பாக இருக்கும்.

சொத்தானது முறையாக மதிப்பிடப்பட்டு அனைத்து சட்ட ஆவணங்களும் தயாரிக்கப்பட்டு உங்கள் பங்கை முழுமையாக முதலீடு செய்து முடித்த பின் கடன் தொகை உங்களுக்கு வந்து சேரும்.

எச் டி எஃப் சி ஆல் மதிப்பிடப்பட்ட படி, கட்டமைப்பு/புதுப்பித்தல் மேம்பாட்டு அடிப்படையிலான தவணைகளில் நாங்கள் உங்கள் கடன் தொகையை வழங்குவோம்.

தேவையான ஆவணங்கள் மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்கள் தொடர்பான சரிபார்ப்பு பட்டியலை நீங்கள் https://www.hdfc.com/checklist#documents-charges என்ற இணையதள பக்கத்தில் காணலாம்

இது கூடுதல் ரூம்கள் மற்றும் ஃப்ளோர்கள் போன்றவற்றை அமைத்து உங்கள் வீட்டை விரிவுபடுத்துவதற்கான அல்லது உங்கள் வீட்டின் அளவை அதிகரிப்பதற்கான கடனாகும்.

தங்களது அடுக்குமாடி குடியிருப்பு/தளம்/வரிசை வீட்டின் இடத்தை அதிகரிக்க விரும்பும் எந்தவொரு நபரும் எச் டி எஃப் சி-இல் இருந்து ஒரு வீட்டு விரிவாக்க கடனை பெற முடியும். நடப்பு வீட்டு கடன் வாடிக்கையாளர்கள் கூட ஒரு வீட்டு விரிவாக்க கடனைப் பெற முடியும்.

அதிகபட்சமாக 20 ஆண்டுகள் அல்லது நீங்கள் ஓய்வு பெறும் வயது வரை, இதில் எது குறைவானதோ அத்தகைய காலவரம்பு வரைக்குமான ஒரு வீட்டு விரிவாக்க கடனை நீங்கள் பெற முடியும்.

வீட்டு விரிவாக்க கடன்களுக்கு பொருந்தும் வட்டி விகிதங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களிலிருந்து வேறுபடுவதில்லை.

ஆம். வருமான வரி சட்டம், 1961. இன் கீழ் உங்கள் வீட்டு விரிவாக்க கடனின் அசல் மற்றும் வட்டி பகுதிகளின் மீது உங்களுக்கு வரி சலுகைகள் கிடைக்கும். இச்சலுகைகள் ஆண்டு தோறும் மாறுவதால் உங்கள் கடன் ஆலோசகருடன் உங்கள் கடன் மீதான வரி சலுகைகளை பற்றி கலந்தாலோசிக்கவும்.

கடனின் பாதுகாப்பு பொதுவாக எங்களால் நிதியளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எங்களுக்குத் தேவைப்படும் வேறு எந்த இணை / இடைக்கால பாதுகாப்பாக இருக்கும்.

எச் டி எஃப் சி ஆல் மதிப்பிடப்பட்ட படி கட்டமைப்பு/புதுப்பித்தல் மேம்பாட்டு அடிப்படையிலான தவணைகளில் எச் டி எஃப் சி உங்கள் வீட்டு விரிவாக்க கடனை வழங்குகிறது.

தேவையான ஆவணங்கள் மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்கள் தொடர்பான சரிபார்ப்பு பட்டியலை நீங்கள் https://www.hdfc.com/checklist#documents-charges என்ற இணையதள பக்கத்தில் காணலாம்

டாப் அப் கடன்கள் திருமணம், குழந்தைகளின் கல்வி, தொழில் விரிவாக்கம், கடன் ஒருங்கிணைப்பு போன்ற தனிபட்ட மற்றும் தொழில் தேவைகளுக்காக (யூக அடிப்படையிலான வணிகத்தை தவிர) பெறப்படுகின்றன.

ஏற்கனவே வீட்டு கடன் உள்ள எல்லா வாடிக்கையாளர்களும், வீடு மேம்பாட்டு கடன் அல்லது. ஒரு வீட்டு விரிவாக்க கடன் மேல் புதிய கடன் விண்ணப்பிக்க முடியும் எங்கள் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கடனைப் பெறும் புதிய வாடிக்கையாளர்கள் கூடுதலாக எச்டிஎஃப்சியிடமிருந்து டாப் அப் கடனைப் பெறலாம். உங்களுடைய தற்போதைய வீட்டுக் கடனின் இறுதி பணமளித்தலின் 12 மாதங்களுக்குப் பிறகு, ஏற்கனவே உள்ள நிதியளிக்கப்பட்ட சொத்தை வைத்திருத்தல் / நிறைவு செய்த பிறகு நீங்கள் ஒரு சிறந்த கடனுக்காக விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச டாப் அப் கடன் அனைத்தும் உங்களுக்கு முதலில் அனுமதிக்கப்பட்ட கடன் தொகைக்கு சமமானதாகும் அல்லது ₹. 50 லட்சம், குறைந்தது எது குறைவாக உள்ளது. இது மொத்த கடன் தொகைகளுக்கு மேலும் ஒட்டுமொத்த கடன்கள் மற்றும் மேல் புதிய கடன் ஒட்டுமொத்த தொகை விட அதிகமாக 80% மிகாமல் ஒட்டுமொத்த வெளிப்பாடு ₹. 75 லட்சம் மற்றும் ₹. 75% வரை மொத்த வெளிப்பாடு. எச் டி எஃப் சி மூலம் மதிப்பிடப்பட்ட அடமானம் கொண்ட சொத்துக்களின் சந்தை மதிப்பு ₹. 75 லட்சம்.

அதிகபட்சமாக 15 ஆண்டுகள் அல்லது நீங்கள் ஓய்வு பெறும் வயது வரை, இதில் எது குறைவானதோ அத்தகைய காலவரம்பு வரைக்குமான ஒரு டாப் அப் கடனை நீங்கள் பெற முடியும்.

 

கடனின் பாதுகாப்பு பொதுவாக எங்களால் நிதியளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எங்களுக்குத் தேவைப்படும் வேறு எந்த இணை / இடைக்கால பாதுகாப்பாக இருக்கும்.

முடியும். எச் டி எஃப் சி-இல் இருந்து ஒரு பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கடனுடன் கூடுதலாக ஒரு டாப் அப் கடனைப் பெற முடியும்

தேவையான ஆவணங்கள் மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்கள் தொடர்பான சரிபார்ப்பு பட்டியலை நீங்கள் https://www.hdfc.com/checklist#documents-charges என்ற இணையதள பக்கத்தில் காணலாம்

இது திருமணம், மருத்துவச் செலவுகள் மற்றும் குழந்தைகளின் கல்வி போன்ற தனிபட்ட மற்றும் தொழில் தேவைகளுக்காக (யூக அடிப்படையிலான வணிகத்தை தவிர): முழுமையாக கட்டப்பட்ட, ஃப்ரீஹோல்டு குடியிருப்பு மற்றும் வணிக சொத்துகள் மீது பெறப்படும் கடனாகும். மேலும் மற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து நடப்பில் உள்ள சொத்து மீதான கடன்களை (LAP) எச் டி எஃப் சி-க்கு டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.

நடப்பிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு, பெறப்பட்ட அனைத்து நடப்பிலுள்ள கடன்கள் மற்றும் சொத்து மீதான கடனின் அசல் நிலுவைத்தொகையானது, எச் டி எஃப் சி ஆல் மதிப்பிடப்பட்டது படி, அடமானமாக வைக்கப்பட்ட சொத்தின் சந்தை மதிப்பின் 60% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. புதிய வாடிக்கையாளர்களுக்கு, பெறப்பட்ட சொத்து மீதான கடன், எச் டி எஃப் சி ஆல் மதிப்பிடப்பட்டது படி, பொதுவாக, சொத்தின் சந்தை மதிப்பின் 50% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.

சொத்து மீதான கடன்கள் (LAP) திருமணம், குழந்தைகளின் கல்வி, தொழில் விரிவாக்கம், கடன் ஒருங்கிணைப்பு போன்ற தனிபட்ட மற்றும் தொழில் தேவைகளுக்காக (யூக அடிப்படையிலான வணிகத்தை தவிர) சம்பளதாரர்கள் மற்றும் சுய தொழில்புரிபவர்கள் என இரு பிரிவினருக்கும் வழங்கப்படுகின்றன.

அதிகபட்சமாக 15 ஆண்டுகள் அல்லது நீங்கள் ஓய்வு பெறும் வயது வரை, இதில் எது குறைவானதோ அத்தகைய காலவரம்பு வரைக்குமான ஒரு சொத்து மீதான கடனை நீங்கள் பெற முடியும்.

கடனின் பாதுகாப்பு பொதுவாக எங்களால் நிதியளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எங்களுக்குத் தேவைப்படும் வேறு எந்த இணை / இடைக்கால பாதுகாப்பாக இருக்கும்.

முடியும் ,ஒரு முழுமையாக கட்டமைக்கப்பட்ட மற்றும் ஃப்ரீஹோல்டு வணிக சொத்துகளின் மீது சொத்து மீதான கடனை (LAP) பெற முடியும் .

தேவையான ஆவணங்கள் மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்கள் தொடர்பான சரிபார்ப்பு பட்டியலை நீங்கள் https://www.hdfc.com/checklist#documents-charges என்ற இணையதள பக்கத்தில் காணலாம்

இந்த கடனானது ஒரு அலுவலகம் அல்லது கிளினிக் வாங்குவதற்குத் தேவையான அதுமட்டுமின்றி ஒரு அலுவலகம் அல்லது கிளினிக்கை விரிவாக்க, மேம்படுத்த அல்லது கட்டமைப்பதற்குத் தேவையான கடனாகும். ஒரு நடப்பிலுள்ள வணிக சொத்து கடனை மற்ற வங்கி/நிதி நிறுவனத்திலிருந்து எச் டி எஃப் சி-க்கு மாற்ற முடியும்.

மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் தொழில் உரிமையாளர்கள் போன்ற சுய தொழில்புரிவோர்கள் ஒரு அலுவலகம் அல்லது கிளினிக்கை வாங்க ஒரு வணிக சொத்து கடனைப் பெற முடியும்.

 

அதிகபட்சமாக 15 ஆண்டுகள் அல்லது நீங்கள் ஓய்வூ பெறும் வயது வரை, இதில் எது குறைவானதோ அத்தகைய காலவரம்பு வரைக்குமான ஒரு வணிக சொத்து கடனை நீங்கள் பெற முடியும்.

தேவையான ஆவணங்கள் மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்கள் தொடர்பான சரிபார்ப்பு பட்டியலை நீங்கள் https://www.hdfc.com/checklist#documents-charges என்ற இணையதள பக்கத்தில் காணலாம்

இது ஒரு புதிய அல்லது நடப்பிலுள்ள வணிக மனையை வாங்குவதற்கான கடனாகும். ஒரு நடப்பிலுள்ள வணிக சொத்து கடனை (மனை) மற்ற வங்கி/நிதி நிறுவனத்திலிருந்து எச் டி எஃப் சி-க்கு மாற்ற முடியும்.

மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் போன்ற சுய தொழில்புரியும் நபர்கள் ஒரு அலுவலகம் அல்லது ஒரு கிளினிக்கை கட்டுவதற்கு ஒரு வணிக சொத்து கடனை (மனை) பெற முடியும்.

அதிகபட்சமாக 15 ஆண்டுகள் அல்லது நீங்கள் ஓய்வூ பெறும் வயது வரை, இதில் எது குறைவானதோ அத்தகைய காலவரம்பு வரைக்குமான ஒரு வணிக சொத்து கடனை நீங்கள் பெற முடியும்.

தேவையான ஆவணங்கள் மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்கள் தொடர்பான சரிபார்ப்பு பட்டியலை நீங்கள் https://www.hdfc.com/checklist#documents-charges என்ற இணையதள பக்கத்தில் காணலாம்

ஆம் பெண்களுக்கு மற்றவர்களைவிட வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் குறைவு. அவர்கள் உரிமையாளராகவோ / துணை உரிமையாளராகவோ இருந்து வீட்டுக்கடனைப் பெற விண்ணப்பதாரர் / துணை விண்ணப்பதாரராக இருந்து மற்றவர்களுக்கு பொருந்தக்கூடியதைவிட குறைவான வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை பெறலாம்.

ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் வீட்டுக்கடன்களின் வகைகள் பின்வருமாறு: வீட்டுக்கடன்கள்: இந்த கடன்கள் இதற்காக பெறப்பட்டுள்ளன:

1. The purchase of a flat, row house, bungalow from private developers in approved projects;

2.Home Loans for purchase of properties from Development Authorities such as DDA, MHADA as well as Existing Co-operative Housing Societies, Apartment Owners' Association or Development Authorities settlements or privately built up homes;

3.ஒரு சொந்த இடம் / வாடகை குத்தகைத் திட்டத்தில் அல்லது ஒரு அபிவிருத்தி அதிகார சபை மூலம் ஒதுக்கப்பட்ட ஒரு திட்டத்தில் கட்டுமான கடன்கள் வழங்கப்படும்

பிளாட் வாங்குவதற்கான கடன்: பிளாட் வாங்குவதற்கான கடன் என்பது டைரக்ட் அலாட்மென்ட் அல்லது ஒரு செகண்ட் சேல் பரிவர்த்தனை மூலம் பிளாட்களை வாங்குவதற்கான கடனாகும் மேலும் மற்ற வங்கி /நிதி நிறுவனம் மூலம் பெறப்பட்ட பிளாட் வாங்குதல் கடனை இதன் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.

பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கடன்: நீங்கள் மற்ற வங்கி / நிதி நிறுவனத்தில் இருந்து பெற்ற உங்கள் நடப்பு வீட்டுக்கடனை எச் டி எஃப் சி-க்கு மாற்றுவதாகும் .

வீட்டு மேம்பாட்டு கடன்: இது உங்கள் வீட்டை புதுப்பிக்க (வீட்டு கட்டுமான அமைப்பு/நிலத்தின் அளவு தவிற) அதாவது டைல்ஸ் பதிப்பது, தரையை புதுப்பிப்பது, உட்புறம் / வெளிப்புறம் பெயிண்டிங் செய்வது போன்றவற்றை செய்வதற்காக வாங்கும் கடனாகும்.

வீட்டு விரிவாக்க கடன்: உங்கள் வீட்டை விரிவாக்கம் செய்திட அதாவது கூடுதலான தளம் மற்றும் அறைகளை சேர்க்க பெறப்படும் கடனாகும்.

டாப் அப் கடன்கள்: திருமணம், குழந்தையின் கல்வி, தொழில் விரிவாக்கம், கடன் ஒருங்கிணைப்பு முதலியன போன்ற தனிநபர் மற்றும் தொழில் ரீதியான தேவைகளுக்காக (ஊக நோக்கங்கள் தவிற) பெறக்கூடிய கடன்கள் ஆகும்.

சொத்து மீதான கடன் (எல்ஏபி): இது திருமணம், மருத்துவச் செலவுகள் மற்றும் குழந்தைகளின் கல்வி போன்ற தனிபட்ட மற்றும் தொழில் தேவைகளுக்காக (யூக அடிப்படையிலான வணிகத்தை தவிர): முழுமையாக கட்டப்பட்ட, ஃப்ரீஹோல்டு குடியிருப்பு மற்றும் வணிக சொத்துகள் மீது பெறப்படும் கடனாகும். மேலும் மற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து நடப்பில் உள்ள சொத்து மீதான கடன்களை (எல்ஏபி) எச் டி எஃப் சி-க்கு பரிமாற்றம் செய்யலாம்.

வீட்டுக்கடன்களுக்கு பொருந்தும் கட்டணங்களின் முழுமையான பட்டியலைக் காண, தயவுசெய்து https://www.hdfc.com/checklist#documents-charges-யில் சென்று காணுங்கள்

ஆம், நீங்கள் உங்கள் துணைவரை உங்கள் வீட்டுக் கடனுக்கான துணை விண்ணப்பதாரராக சேர்க்கலாம். எச் டி எஃப் சி -க்கு தேவைப்படும் வருமான ஆவணங்கள் கிடைப்பதற்கு உட்பட்டு உங்கள் வீட்டுக் கடன் தகுதியைக் கண்டறிவதற்காக உங்கள் துணைவரின் வருமானம் கருதப்படலாம்.

நீங்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட ஒரு வீட்டுக் கடனுக்காக விண்ணப்பிக்கலாம் அது உங்கள் வருமானம், கடன்தகுதி மற்றும் நிதி நிலையின் அடிப்படையில் கடனுக்காக ஒப்புதலளிக்கப்பட்ட அசல் தொகையாகும். பொதுவாக சொத்து தேர்வு செய்த பின்னர் பெறப்பட்ட முன்-ஒப்புதலளிக்கப்பட்ட கடன்கள் ஆனது கடன் ஒப்புதல் வழங்கப்பட்ட தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

உங்கள் வீட்டுக்கடனுக்கு துணை விண்ணப்பதாரர் இருப்பது அவசியமில்லை. எனினும், வீட்டுக்கடன் பெறுவதற்காக உள்ள சொத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் இருந்தால், அந்த அனைத்து உரிமையாளர்களும் வீட்டுக்கடனின் துணை விண்ணப்பதாரர்களாக இருக்க வேண்டும். பொதுவாக துணை விண்ணப்பதாரர்கள் நெருங்கிய குடும்ப நபர்களாகதான் இருப்பார்கள்.

ஆம், எச் டி எஃப் சி அதன் நடப்பு வாடிக்கையாளருக்கு தற்காலிக வட்டி சான்றிதழை பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்குகிறது. நடப்பு வாடிக்கையாளர்கள் https://online.hdfc.com/inet/ -க்கு சென்று 'ஆன்லைன் அக்சஸ் மாட்யூல்'-யில் உள்நுழைவதன் மூலம் அவர்களது தற்காலிக வட்டி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்.

நீங்கள் https://online.hdfc.com/inet/ -க்கு சென்று 'ஆன்லைன் அக்சஸ் மாட்யூல்'-யில் உள்நுழைவதன் மூலம் உங்கள் கடைசி நிதியாண்டின் கடைசி வட்டி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.

எச் டி எஃப் சி கட்டுமானத்தின்கீழ் உள்ள சொத்துக்களுக்கு அதன் கட்டுமான நிலையின் அடிப்படையில் தவணை முறையில் கடன்களை பட்டுவாடா செய்கிறது. பட்டுவாடா செய்யப்பட்ட ஒவ்வொரு தவணையும் 'பகுதி' அல்லது ஒரு 'அடுத்தடுத்த' பட்டுவாடா எனப்படும்.

சாட் செய்யவும்!