வைப்புகள்

அனைவருக்குமான முதலீடுகள்

நீங்கள் வெளிநாட்டில் வாழும் இந்தியரா?
இல்லை
ஆம்

வைப்புகளை பற்றிய கண்ணோட்டம்

35 ஆண்டுகளுக்கும் மேலாக HDFC அதன் நிலையான வைப்புத்தொகைகள் மீது மாறா செயல்திறனை வழங்கியுள்ளது. நாங்கள் 6 லட்சத்துக்கும் அதிகமான வைப்பாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம்.

எச் டி எஃப் சி இரண்டு முன்னணி கடன் மதிப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து (CRISIL மற்றும் ICRA) AAA மதிப்பீடுகளை தொடர்ச்சியாக 25 ஆண்டுகளுக்கு பெற்றுள்ளது, இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கை மற்றும் உறுதியை உருவாக்குகிறது.

மேம்பட்ட வாடிக்கையாளர் திருப்தி என்பது HDFC இன் அனைத்து தயாரிப்புகளின் மைய கருத்தாக விளங்குகிறது. HDFC வைப்பாளர்களுக்கு இந்தியா முழுவதும் பரவியுள்ள ஒன்றுக்கொன்றுடன் இணைக்கப்பட்டுள்ள 420 அலுவலகங்கள் மூலம் சேவை வழங்கப்படுகிறது மற்றும் 77 வைப்பு மையங்களில் உடனடி சேவைகளும் வழங்கப்படுகின்றன. மின்னணு வட்டி தொகை செலுத்தல், வைப்புக்கு ஈடாக உடனடி கடன் மற்றும் இதர பல சேவைகளின் மூலம் HDFC தன் சேவைகளுக்கு உயர் வரைகளை தொடர்ந்து நிறுவி வருகிறது.

சிறப்பம்சங்கள்

 • அதிகபட்ச பாதுகாப்பு - CRISIL மற்றும் ICRA இரண்டிலிருந்தும் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு AAA மதிப்பீடு.
 • கவர்ச்சியான மற்றும் உத்தரவாதமான லாப விகிதங்கள்.
 • நாடு முழுதும் 420 அலுவலகங்களை உள்ளடக்கிய ஒரு வலைப்பின்னல் மூலம் தரமான சேவை.
 • சுலபமாக தேர்ந்தெடுக்கும் வகையில் பரந்த ரக வைப்புத் திட்டங்கள்.
 • எங்கள் பார்ட்னர் வலைப்பின்னல் மூலம் உன்னதமான வீட்டு சேவை.
 • வைப்புக்கு ஈடாக விரைவு கடன் வசதி.

நீங்கள் இந்தியராக இருந்தால் 12 இலிருந்து 84 மாத கால அளவிலான வைப்பு திட்டங்களிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். பல அம்சங்களை கொண்டு இவைகள் மிகவும் அற்புதமான வட்டி விகிதங்களில் கிடைக்கின்றன தவிர ஒவ்வொரு தனிநபரின் முதலீடு தேவைகளையும் நிறைவேற்றுகின்றன. 60 வயது அல்லது அதற்கும் அதிகமான மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.25% வட்டி அனைத்து திட்டங்களுக்கும் கிடைக்கிறது.

 • மாதாந்திர வருமான திட்டம்
 • மொத்தம்-அல்லாத வட்டி திட்டம்
 • ஆண்டு வருமான திட்டம்
 • மொத்த விருப்பங்கள்
  • நிலையான மாதாந்திர வருமானத்தை வழங்குகிறது.
  • ECS மூலம் மாத வட்டியானது நேரடியாக உங்கள் வங்கி கணக்கிலேயே செலுத்தப்படுகிறது.
  • பணி ஓய்வுபெற்றவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் மூத்த குடிமகன்களுக்கு ஏற்றது
  • நிலையான மற்றும் மாறும் வட்டி விகிதங்களில் கிடைக்கிறது.
  • காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் முறையான காலவரை வட்டி வருமானத்தை வழங்குகிறது.
  • ECS மூலம் வட்டியானது நேரடியாக உங்கள் வங்கி கணக்கிலேயே செலுத்தப்படும்.
  • ஒவ்வொரு காலாண்டு மற்றும் அரையாண்டின் இறுதியில் நிதி தேவைகளை கணக்கிட பொருத்தமானதாகும்.
  • நிலையான மற்றும் மாறும் வட்டி விகிதங்களில் கிடைக்கிறது.
  • நிலையான ஆண்டு வட்டி வருமானத்தை ஈட்டி தருகிறது.
  • ECS மூலம் வட்டியானது நேரடியாக உங்கள் வங்கி கணக்கிலேயே செலுத்தப்படும்.
  • லாபங்களை அதிகரிக்கவும் ஆண்டு செலவுகளை திட்டமிடுதலுக்கும் ஏற்றது.
  • நிலையான மற்றும் மாறும் வட்டி விகிதங்களில் கிடைக்கிறது.
  • வைப்பு தவணைக்கால இறுதியில் ஒரு ஒட்டுமொத்த தொகையை வழங்குகிறது.
  • எதிர்கால தேவைகளுக்காக நிதியை பெருக்கவும் லாபத்தை அதிகப்படுத்தவும் ஏற்றது.
  • தங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு/திருமணம் இவைகளை திட்டமிடும் பெற்றோர்களுக்கேற்றது.
  • நிலையான மற்றும் மாறும் வட்டி விகிதங்களில் கிடைக்கிறது.

அம்சங்கள்

எச் டி எஃப் சி உருவாக்கியுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு வைப்பு தொடங்கிய தேதியிலிருந்து மூன்று மாதங்கள் பிறகு வைப்புக்கு ஈடாக நீங்கள் வைப்புத்தொகையில் 75% வரை ஒரு கடன் பெறலாம். அதற்கான வட்டியானது வைப்பு விகிதத்தை விட 2% அதிகமாக இருக்கும்.

வைப்புகளுக்கான வட்டி மின்னணு பணம் செலுத்தல் சேவை வசதி உள்ள இடங்களில் உங்கள் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

உங்கள் வைப்பிற்கான வட்டி உங்கள் தொகை காசோலை அல்லது RTGS பரிமாற்றம் மூலம் எங்களுக்கு கிடைத்த தினத்திலிருந்து வழங்கப்படும். மாத வருமான திட்டம், நான்-க்யூமிலேட்டிவ் ஆப்ஷன் மற்றும் ஆண்டு வருமான திட்டம் இவற்றின் கீழ்வரும் வைப்புகள் நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வழங்கப்படும்:

வைப்புகள் திட்டம் நிர்ணயிக்கப்பட்ட தேதிகள்
மாதாந்திர வருமான திட்டம் (MIP) ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாள்
நான்-க்யூமிலேட்டிவ்: காலாண்டு விருப்ப தேர்வு ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31 & மார்ச் 31
நான்-க்யூமிலேட்டிவ்: அரையாண்டு விருப்ப தேர்வு செப்டம்பர் 30, மற்றும் மார்ச் 31
ஆண்டு வருமான திட்டம் (AIP) மார்ச் 31

மொத்த வட்டி விருப்ப தேர்வு: வட்டியானது ஆண்டுக்கொருமுறை மார்ச் 31 அன்று வரி கழிக்கப்பட்டு கணக்கிடப்படும். வட்டியுடன் கூடிய அசல் முதிர்ச்சிக்கு பின் வைப்பு ரசீது எங்களிடம் கிடைக்கபெற்றவுடன் வழங்கப்படும். வட்டி தொகை (TDS இன் நிகரம்) ECS வசதி கொண்டுள்ள மையங்கள் மூலம் செலுத்தப்படும். ECS வசதியில்லையென்றால் வட்டி காசோலை அக்கவுண்ட் பேயீ காசோலையாக வைப்பின் முதல் பெயர் கொண்ட நபருக்கு அவருடைய வங்கி கணக்கு தகவல்களுடன் வழங்கப்படும். MIP என்றால், முன் தேதியிட்ட வட்டி காசோலை ஒவ்வொரு நிதியாண்டிலும் முன்கூட்டியே வழங்கப்படும். மாறும் வட்டி விகித வைப்பின் கீழ் வரும் மாதாந்திர வருமான திட்டத்துக்கான வட்டி டெபாசிட்டரின் வங்கி கணக்கில் மாதத்தின் கடைசி தினத்தன்று ECS மூலமே வழங்கப்படும். வைப்பு புதுப்பிக்கப்பட்டால் மட்டுமே வட்டி தொடர்ந்து கிடைக்கும்.

வட்டி விகிதம் (RoI) ஒவ்வொரு வட்டி காலகட்டத்தின் துவக்கத்தில் மாற்றியமைக்கப்படும். வட்டி காலகட்டத்தின் முதல் நாளிருந்த RoI ஆனது ஒட்டுமொத்த வட்டி காலகட்டத்துக்கும் பொருந்தும்.

ஒரு நிதியாண்டில் ₹.5,000/- வரை வட்டி செலுத்தப்பட்டிருந்தால் மூல வரி பிடித்தம் இருக்காது. வருமான வரி சட்டம், 1961, பகுதி 194A இன் படி வரியானது நடப்பிலிருக்கும் விகிதங்களில் பிடிக்கப்படும். டெபாசிட்டர் வருமான வரி செலுத்த தேவையில்லை என்றாலோ அல்லது ஒரு ஆண்டில் பெறப்படும் வட்டியானது வருமான வரி வரம்பிற்கு மிகாமலிருந்தாலோ மூல வரி பிடித்தத்தை தவிர்க்க அவர் படிவ எண் 15G ஒன்றை சமர்பிக்க வேண்டும். தவிர PAN (நிரந்தர கணக்கு எண்) யையும் படிவ எண் 15G இல் குறிப்பிடப்பட வேண்டும். இல்லையென்றால் படிவம் செல்லுபடியாகாது. மூத்த குடிமகன்கள் (60 வயது மற்றும் அதிகம்) ஒரு பிரகடனத்தை படிவ எண் 15H மூலம் சமர்பிக்கலாம். வருமான வரி சட்டம், 1961, பகுதி 139A(5A) இன் படி வரி பிடித்தம் செய்யப்பட்ட வட்டி வருமானத்தையுடைய ஒவ்வொரு நபரும் தன் PAN எண்ணை பிடிப்பவருக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், 139A(5B) சட்டத்தின் படி அத்தகைய வரி பிடித்தம் செய்பவர் PAN ஐ TDS சான்றிதழில் குறிப்பிட வேண்டும். PAN குறிப்பிடப்படவில்லை என்றால் வருமான வரி சட்டம், 1961 206AA(1) இன் படி TDS 20% என்ற அளவில் பிடித்தம் செய்யப்படும். ₹.50,000 மற்றும் அதிகமான வைப்புகளுக்கு PAN ஐ தெரிவிப்பது சட்டப்படி அவசியம்.

முன்கூட்டியே வைப்பை முடித்துகொள்ளுதலுக்கான உங்கள் கோரிக்கையானது HDFC இன் முடிவின் படி அனுமதிக்கப்படும் தவிர அதை ஒரு உரிமையாக நீங்கள் கோர முடியாது மற்றும் அவ்வப்போது வீட்டு கடனுதவி நிறுவனங்கள் வழிகாட்டல்கள், 2010 (NHB) க்கு உட்பட்டது.

தொடங்கிய தேதியிலிருந்து மூன்று மாதங்கள் முடிவதற்குள்ளேயே வைப்பை முன்கூட்டியே முடித்துக்கொள்ள அனுமதியில்லை. மூன்று மாத கால அவகாசத்திற்கு பின் முடித்து கொள்ளும் கோரிக்கைக்கான விகிதங்கள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வைப்பு தொடங்கிய தேதியிலிருந்து நிறைவுற்ற மாதங்கள்  செலுத்தப்பட வேண்டிய வட்டி விகிதம்
மூன்று மாதங்கள் பிறகு ஆனால் 6 மாதங்கள் முன்னர் The interest payable shall be 3% per annum for individual depositor, and no interest in case of other category of depositors
ஆறு மாதங்களுக்கு பிறகு ஆனால் முதிர்வு நாளுக்கு முன் ஒரு பொது வைப்புக்கான வட்டி விகிதம் நடப்பிலிருக்கும் காலம் வரை நிர்ணயிக்கப்பட்ட வட்டியை விட ஒரு சதவிகிதம் குறைவானது அல்லது அந்த காலத்துக்கு எந்த விகிதமும் கூறப்படவில்லை என்றால் எச் டி எஃப் சி ஏற்றுகொள்ளும் பொது வைப்புகளுக்கான குறைந்தபட்ச விகிதத்தை விட இரண்டு சதவிகிதம் குறைவு.

வைப்புக்கான புதுப்பித்தல் மற்றும் மறுசெலுத்துதலுக்கு முதிர்ச்சிக்கு ஒரு வாரம் முன் நீங்கள் விடுவிக்கப்பட்ட வைப்பு ரசீதை எச் டி எஃப் சி க்கு சமர்பிக்க வேண்டும். புதுப்பித்தல் என்றால் அனைத்து டெபாசிட்டர்கள் கையெழுத்திட்ட பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவமும் உடன் சமர்பிக்கப்படவேண்டும். முதிர்ச்சி தேதி எச் டி எஃப் சி அலுவலகம் விடுமுறையன்று நிகழ்ந்தால், மறுசெலுத்துதல் அடுத்த வேலை நாளில் செய்யப்படும். வைப்புத்தொகை மறுசெலுத்துதல் அக்கவுண்ட் பேயீ காசோலை மூலம் மட்டுமே முதல் டெபாசிட்டர் பெயரில் வழங்கப்படும் அல்லது முதல் டெபாசிட்டர் வங்கி கணக்கில் நேரடியாக NEFT/RTGS மூலம் டெபாசிட்டரின் கோரிக்கையின் பேரில் செலுத்தப்படும்.

தனி நபர் டெபாசிட்டர்கள், ஒற்றையாகவோ அல்லது சேர்ந்தோ மட்டுமே ஒரு ஒற்றை நபரை இவ்வசதி மூலம் நாமினேட் செய்யலாம். வைப்பு மைனர் பெயரில் தொடங்கப்பட்டிருந்தால் அவரின் சார்பில் செயல்படும் சட்டபூர்வமான நபர் மட்டுமே நாமினேஷன் செய்யலாம். செயலுரிமை பெற்றவரோ அல்லது பிரதிநிதியாக செயல்படும் ஒரு பதவியை கொண்ட எந்த நபரோ நாமினேட் செய்ய முடியாது. நாமினீக்கு வைப்பு தொகையை பெறும் உரிமை உண்டு மற்றும் எச் டி எஃப் சி நாமினீக்கு தொகை செலுத்தியவுடன் எச் டி எஃப் சி வைப்பை பொறுத்தவரை தன் பொறுப்பை முழுமையாக நிறைவேற்றி விட்டதாக கருதப்படும். வேறுவிதமாக கூறப்படாமலிருந்தால் நாமினியின் பெயர் நிலையான வைப்பு ரசீதின் மீது அச்சடிக்கப்படும்.

பண மோசடி தடுப்பு சட்டம், 2000 இன் கீழமையும் விதிகளின் படியும் தேசிய வீட்டு கடன் வங்கி (NHB) KYC வழிகாட்டுதல்கள் கீழும் கீழ்வரும் ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் KYC தேவைகளுக்கு இணங்க வேண்டும்:

 • மிக சமீபத்திய புகைப்படம்
 • அடையாள ஆவணத்தின் சான்றளிக்கப்பட்ட நகல்
 • முகவரி ஆவணத்தின் சான்றளிக்கப்பட்ட நகல்

மேலே குறிப்பிட்ட ஆவணங்களை நீங்கள் ஏற்கனவே சமர்பித்திருந்தால் மீண்டும் ஒருமுறை சமர்ப்பிக்க தேவையில்லை ஆனால் உங்கள் வாடிக்கையாளர் எண்ணையோ அல்லது வைப்பு எண்ணையோ நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். 

வட்டி விகிதங்கள்

ஜூலை 23, 2020 முதல் செல்லுபடியாகும்

சிறப்பு வைப்புகள் (நிலையான விகிதங்கள்) ₹2 கோடி வரை வைப்புகள் (ஆண்டுக்கு)
காலம் மாதாந்திர வருமான திட்டம் காலாண்டு விருப்பம் அரையாண்டு விருப்பம் ஆண்டு வருமான திட்டம் மொத்த விருப்பம்
33 மாதங்கள் 6.15% 6.20% 6.25% 6.35% 6.35%
66 மாதங்கள் 6.25% 6.30% 6.35% 6.45% 6.45%

ப்ரீமியம் வைப்புகள் (நிலையான விகிதங்கள்) ₹2 கோடி வரை வைப்புகள் (ஆண்டுக்கு)
காலம் மாதாந்திர வருமான திட்டம் காலாண்டு விருப்பம் அரையாண்டு விருப்பம் ஆண்டு வருமான திட்டம் மொத்த விருப்பம்
15 மாதங்கள் 6.00% 6.05% 6.10% - 6.20%
22 மாதங்கள் 6.10% 6.15% 6.20% 6.30% 6.30%
30 மாதங்கள் 6.05% 6.10% 6.15% 6.25% 6.25%
44 மாதங்கள் 6.20% 6.25% 6.30% 6.40% 6.40%

தொடர் வைப்புகள் (நிலையான விகிதங்கள்) ₹2 கோடி வரை வைப்புகள் (ஆண்டுக்கு)
காலம் மாதாந்திர வருமான திட்டம் காலாண்டு விருப்பம் அரையாண்டு விருப்பம் ஆண்டு வருமான திட்டம் மொத்த விருப்பம்
12-23 மாதங்கள் 5.95% 6.00% 6.05% - 6.15%
24-35 மாதங்கள் 5.95% 6.00% 6.05% 6.15% 6.15%
36-84 மாதங்கள் 6.05% 6.10% 6.15% 6.25% 6.25%
குறைந்தபட்ச தொகை (₹) ₹40,000 ₹20,000 ₹20,000 ₹20,000 ₹20,000

தொடர் வைப்புகள் (நிலையான விகிதங்கள்) ₹2 கோடிக்கும் அதிகமான மற்றும் ₹5 கோடி வரைக்குமான வைப்புகள் (ஆண்டுக்கு)
காலம் மாதாந்திர வருமான திட்டம் காலாண்டு விருப்பம் அரையாண்டு விருப்பம் ஆண்டு வருமான திட்டம் மொத்த விருப்பம்
12-23 மாதங்கள் 5.65% 5.70% 5.75% - 5.85%
24-84 மாதங்கள் 5.65% 5.70% 5.75% 5.85% 5.85%

தொடர் வைப்புகள் (நிலையான விகிதங்கள்) ₹5 கோடிக்கும் அதிகமான மற்றும் ₹10 கோடி வரைக்குமான வைப்புகள் (ஆண்டுக்கு)
காலம் மாதாந்திர வருமான திட்டம் காலாண்டு விருப்பம் அரையாண்டு விருப்பம் ஆண்டு வருமான திட்டம் மொத்த விருப்பம்
12-23 மாதங்கள் 5.35% 5.40% 5.45% - 5.55%
24-84 மாதங்கள் 5.35% 5.40% 5.45% 5.55% 5.55%

ஜூலை 23, 2020 முதல் செல்லுபடியாகும்

தொடர் வைப்புகள் (நிலையான விகிதங்கள்) ₹10 கோடிக்கும் அதிகமான மற்றும் ₹25 கோடிக்கும் குறைவான வைப்புகள் (ஆண்டுக்கு)
காலம் மாதாந்திர வருமான திட்டம் காலாண்டு விருப்பம் அரையாண்டு விருப்பம் ஆண்டு வருமான திட்டம் மொத்த விருப்பம்
12-23 மாதங்கள் 5.30% 5.35% 5.40% - 5.50%
24-84 மாதங்கள் 5.30% 5.35% 5.40% 5.50% 5.50%

ஜூலை 24, 2020 முதல் செல்லுபடியாகும்

தொடர் வைப்புகள் (நிலையான விகிதங்கள்) ₹25 கோடி மற்றும் அதற்கு மேலான வைப்புகள் (ஆண்டுக்கு)
காலம் மாதாந்திர வருமான திட்டம் காலாண்டு விருப்பம் அரையாண்டு விருப்பம் ஆண்டு வருமான திட்டம் மொத்த விருப்பம்
12-23 மாதங்கள் 5.00% 5.05% 5.10% - 5.20%
24-84 மாதங்கள் 5.00% 5.05% 5.10% 5.20% 5.20%

தொடர் வைப்பு திட்டம் (RD) நிலையான விகித தவணை வைப்பு திட்டம்
வைப்பு காலம் ROI (ஆண்டுக்கு) #
12-60 மாதங்கள் 5.85%

*குறைந்தபட்ச மாதாந்திர சேமிப்பு தொகை ₹2,000/-

*A. மூத்த குடிமக்கள் (60 ஆண்டுகள்+) ₹2 கோடி வரையிலான வைப்புகளுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 0.25% பெற தகுதியுடையவர்கள் (தொடர் வைப்புகள் தவிர)

*B. எங்கள் ஆன்லைன் அமைப்பு மற்றும் தானாக புதுப்பிக்கப்பட்ட வைப்புகள் மூலம் ₹10 லட்சம் வரை (RD தவிர) தனிநபர் வைப்புகளுக்கு ஆண்டுக்கு 0.10% கூடுதல் ROI பொருந்தும்.

*C. ஒட்டுமொத்த விருப்பத்திற்கு, வட்டி ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது.

வட்டி விகிதங்கள் மாறும் தன்மையுடையவை தவிர வழங்கப்படும் விகிதமானது வைப்பு தொடங்கிய தேதியில் இருந்த விகிதத்தை கொண்டிருக்கும்.

ஜூலை 23, 2020 முதல் செல்லுபடியாகும்

சிறப்பு வைப்புகள் (நிலையான விகிதங்கள்) ₹2 கோடி வரை வைப்புகள் (ஆண்டுக்கு)
காலம் மாதாந்திர வருமான திட்டம் காலாண்டு விருப்பம் அரையாண்டு விருப்பம் ஆண்டு வருமான திட்டம் மொத்த விருப்பம்
33 மாதங்கள் 6.00% 6.05% 6.10% 6.20% 6.20%
66 மாதங்கள் 6.00% 6.05% 6.10% 6.20% 6.20%
குறைந்தபட்ச தொகை (₹) ₹40,000 ₹20,000 ₹20,000 ₹20,000 ₹20,000

ப்ரீமியம் வைப்புகள் (நிலையான விகிதங்கள்) ₹2 கோடி வரை வைப்புகள் (ஆண்டுக்கு)
காலம் மாதாந்திர வருமான திட்டம் காலாண்டு விருப்பம் அரையாண்டு விருப்பம் ஆண்டு வருமான திட்டம் மொத்த விருப்பம்
15 மாதங்கள் 5.95% 6.00% 6.05% - 6.15%
30 மாதங்கள் 5.95% 6.00% 6.05% 6.15% 6.15%
குறைந்தபட்ச தொகை (₹) ₹40,000 ₹20,000 ₹20,000 ₹20,000 ₹20,000

தொடர் வைப்புகள் (நிலையான விகிதங்கள்) ₹2 கோடி வரை வைப்புகள் (ஆண்டுக்கு)
காலம் மாதாந்திர வருமான திட்டம் காலாண்டு விருப்பம் அரையாண்டு விருப்பம் ஆண்டு வருமான திட்டம் மொத்த விருப்பம்
12-23 மாதங்கள் 5.85% 5.90% 5.95% - 6.05%
24-84 மாதங்கள் 5.85% 5.90% 5.95% 6.05% 6.05%
குறைந்தபட்ச தொகை (₹) ₹40000 ₹20000 ₹20000 ₹20000 ₹20000

தொடர் வைப்புகள் (நிலையான விகிதங்கள்) ₹2 கோடிக்கும் அதிகமான மற்றும் ₹5 கோடி வரைக்குமான வைப்புகள் (ஆண்டுக்கு)
காலம் மாதாந்திர வருமான திட்டம் காலாண்டு விருப்பம் அரையாண்டு விருப்பம் ஆண்டு வருமான திட்டம் மொத்த விருப்பம்
12-23 மாதங்கள் 5.65% 5.70% 5.75% - 5.85%
24-84 மாதங்கள் 5.65% 5.70% 5.75% 5.85% 5.85%

தொடர் வைப்புகள் (நிலையான விகிதங்கள்) ₹5 கோடிக்கும் அதிகமான மற்றும் ₹10 கோடி வரைக்குமான வைப்புகள் (ஆண்டுக்கு)
காலம் மாதாந்திர வருமான திட்டம் காலாண்டு விருப்பம் அரையாண்டு விருப்பம் ஆண்டு வருமான திட்டம் மொத்த விருப்பம்
12-23 மாதங்கள் 5.35% 5.40% 5.45% - 5.55%
24-84 மாதங்கள் 5.35% 5.40% 5.45% 5.55% 5.55%

ஜூலை 23, 2020 முதல் செல்லுபடியாகும்

தொடர் வைப்புகள் (நிலையான விகிதங்கள்) ₹10 கோடிக்கும் அதிகமான மற்றும் ₹25 கோடிக்கும் குறைவான வைப்புகள் (ஆண்டுக்கு)
காலம் மாதாந்திர வருமான திட்டம் காலாண்டு விருப்பம் அரையாண்டு விருப்பம் ஆண்டு வருமான திட்டம் மொத்த விருப்பம்
12-23 மாதங்கள் 5.30% 5.35% 5.40% - 5.50%
24-84 மாதங்கள் 5.30% 5.35% 5.40% 5.50% 5.50%

ஜூலை 24, 2020 முதல் செல்லுபடியாகும்

தொடர் வைப்புகள் (நிலையான விகிதங்கள்) ₹25 கோடி மற்றும் அதற்கு மேலான வைப்புகள் (ஆண்டுக்கு)
காலம் மாதாந்திர வருமான திட்டம் காலாண்டு விருப்பம் அரையாண்டு விருப்பம் ஆண்டு வருமான திட்டம் மொத்த விருப்பம்
12-23 மாதங்கள் 5.00% 5.05% 5.10% - 5.20%
24-84 மாதங்கள் 5.00% 5.05% 5.10% 5.20% 5.20%

வட்டி விகிதங்கள் மாறும் தன்மையுடையவை தவிர வழங்கப்படும் விகிதமானது வைப்பு தொடங்கிய தேதியில் இருந்த விகிதத்தை கொண்டிருக்கும்.

ஒரு முதன்மை பார்ட்னராக இணைந்து கொள்ளுங்கள்

எச் டி எஃப் சி 17 லட்சத்திற்கும் மேற்பட்ட வைப்பாளர்களிடமிருந்து வீட்டு நிதிகளை திரட்டியுள்ளது. எங்கள் வைப்புத்தொகை தயாரிப்புகள் கடந்த 25 ஆண்டுகளில் CRISIL மற்றும் ICRA -யில் இருந்து தொடர்ந்து 'AAA' கிரெடிட் மதிப்பீட்டை அனுபவித்துள்ளன மற்றும் நாங்கள் அதிக தரமான சேவையை வழங்குகிறோம்.

எங்கள் அனைத்து ரீடெய்ல் சேமிப்பு திட்டங்களும் எங்கள் முதன்மை பார்ட்னர்கள் வழியாக விநியோகம் செய்யப்படுகிறது. கவர்ச்சியான ப்ரோக்கரேஜ்/கமிஷன் அமைப்புகள் மூலம் பயனடைவதற்கும் மேலாக எங்கள் முதன்மை பார்ட்னர்கள் மற்ற நிதி நிறுவனங்களுக்கும் ஏஜென்டுகளாக செயல்படலாம். ஒரு முதன்மை பார்ட்னர் என்ற வகையில் உங்கள் திட்ட வழங்கல்களை வலுப்படுத்தவும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரந்த முதலீட்டு விருப்ப தேர்வுகளை வழங்கவும் இது உங்களுக்கு உதவும்.

 • கவர்ச்சியான வருமான முறை
 • எச் டி எஃப் சி அதிகாரிகளின் விரிவான ஆதரவு
 • நம்பிக்கையான மற்றும் பாதுகாப்பான திட்ட வரிசை
 • உலகத்தர நிறுவன பெருமை
 • பிரபலமான வீட்டு வசதி துறை பிராண்ட்
 • மற்ற நிதி நிறுவனங்களின் விநியோகஸ்தராகவும் செயல்படும் வாய்ப்பு

இரு எளிய படிநிலைகளை பின்பற்றவும்

வழிமுறை 1

கீழ்வரும் இணைப்பிலுள்ள படிவத்தை பூர்த்தி செய்து உங்களுக்கு அருகாமையிலுள்ள எச் டி எஃப் சி வைப்பு மையத்தில் சமர்ப்பிக்கவும் அல்லது ஏதாவது ஒரு எச் டி எஃப் சி வைப்பு கிளைக்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

வைப்பு முகவர்கள் படிவம்

வழிமுறை 2

உங்களுக்கு ஒரு நேர்முகம் நடத்தப்பட்டு அதில் நீங்கள் தேர்வு செய்யப்பட்டால் ஒரு அங்கீகரிக்கப்பட்ட முதன்மை பார்ட்னர் என்று பதிவு செய்யப்படுவீர்கள்.

இந்தியா முழுவதும் உள்ள எச்டிஎஃப்சி வைப்பு மையங்கள்

சாட் செய்யவும்!