வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் | EMI கால்குலேட்டர் | வீட்டுக் கடனுக்கான EMI ஐ கணக்கிடுங்கள்

எச் டி எஃப் சி வீட்டு கடன் தொடர்பான FAQ-க்கள்

Q. நான் பெறக்கூடிய கடன் தொகையை எச் டி எஃப் சி எவ்வாறு முடிவு செய்யும்?

Ans: நாங்கள் உங்கள் வீட்டு வசதி கடன் தகுதியை பெரும்பாலும் உங்கள் வருமானம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் அடிப்படையில் தீர்மானிப்போம். உங்களுடைய வயது, தகுதி, உங்களைச் சார்ந்திருப்போர்களின் எண்ணிக்கை, உங்கள் மனைவியின் வருமானம் (ஏதேனும் இருந்தால்), உங்களுடைய சொத்துகள் மற்றும் பொறுப்புகள், சேமிப்பு வரலாறு மற்றும் வேலையின் நிலைத்தன்மை & வேலை காலம் ஆகிய முக்கிய காரணிகளும் உள்ளடங்கும்.

Q. EMI என்றால் என்ன?

Ans: EMI ஆனது ‘சமமான மாதாந்திர தவணை’ என்பதை குறிக்கிறது, இது கடனை திருப்பிச் செலுத்தும் வரை ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை. EMI ஆனது அசல் தொகை மற்றும் வட்டி தொகையை உள்ளடக்கியது. உங்கள் கடன்களின் ஆரம்ப ஆண்டுகளில், வட்டி கூறானது அசல் தொகையை விட மிக அதிகமானதாகவும், அதே நேரத்தில் கடனின் இரண்டாவது பாதியில், அசல் தொகை மிக அதிகமானதாக இருக்கும்படியும் இது அமைக்கப்பட்டுள்ளது.

Q. ‘சொந்த பங்களிப்பு’ என்றால் என்ன?

Ans: சொந்த பங்களிப்பு என்பது சொத்தின் மொத்த மதிப்பில் இருந்து HDFC -யின் வீட்டு வசதி கடனை கழித்த மதிப்பு ஆகும்.

Q. நான் எப்படி கடனை திருப்பி செலுத்துவது?

Ans: உங்கள் வசதிக்கேற்ப, வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதற்குப் பல்வேறு வகையான முறைகளை HDFC வழங்குகிறது. ECS (எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம்) மூலம் தவணைகளை செலுத்த உங்கள் வங்கியிடம் நீங்கள் ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷனை வழங்கலாம், உங்கள் சம்பள கணக்கிலிருந்து மாதந்தோறும் தவணைகளை நேரடியாக செலுத்தலாம் அல்லது உங்கள் சம்பள கணக்கிலிருந்து பிந்தைய தேதியிட்ட காசோலைகள் மூலமாகவும் தவணைகளைச் செலுத்தலாம்.

Q. நான் எப்போது விண்ணப்பம் அளிக்கலாம்?

Ans: நீங்கள் ஒரு சொத்தை வாங்க அல்லது வீட்டை கட்ட தீர்மானித்த உடனே கடனுக்காக விண்ணப்பிக்கலாம், நீங்கள் சொத்தை இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை மற்றும் வீடு கட்டும் வேலையை தொடங்கவில்லை என்றாலும் கூட விண்ணப்பிக்கலாம்.

எச் டி எஃப் சி வீட்டுக் கடன் தொடர்பான FAQ-களுக்கு, கிளிக் செய்யவும் https://www.hdfc.com/checklist/faqs