பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா

Ministry of Housing and Urban Poverty Alleviation (MoHUPA) has introduced in June 2015, an interest subsidy scheme called Credit Linked Subsidy Scheme (CLSS) under Pradhan Mantri Awas Yojana (URBAN)-Housing for All, for purchase/ construction/ extension/ improvement of house to cater Economical Weaker Section(EWS)/Lower Income Group(LIG)/Middle Income Group (MIG), given the projected growth of urbanization & the consequent housing demands in India.

PMAY நன்மைகள்

PMAY-இன் கீழ் கடன் இணைக்கப்பட்ட மானிய திட்டம் (CLSS) வீட்டு கடனை மலிவானதாக்குகிறது ஏனெனில் வட்டி கூறு மீது வழங்கப்பட்ட மானியம் வீட்டுக் கடன் மீது வாடிக்கையாளர் செலவிடும் அதிகப்படியான தொகையைக் குறைக்கிறது. திட்டத்தின் கீழ் உள்ள மானியம் பெரும்பாலும் வாடிக்கையாளர் சார்ந்துள்ள வருமான வகை மற்றும் நிதி அளிக்கப்படும் சொத்தின் அளவைச் சார்ந்துள்ளது.

வருமான வகைகள் அடிப்படையிலான நன்மைகள் பின்வருமாறு:

EWS/LIG வகை:

₹. 3 இலட்சத்திற்கு மேல் ஆனால் ₹. 6 இலட்சத்திற்குள் ஆண்டு வீட்டு வருமானம் கொண்ட நபர்கள் LIG மற்றும் EWS வகைகளுக்குள் குறிப்பிடப்படுகின்றனர். பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு (EWS) மற்றும் குறைந்த வருமானம் பெறும் (LIG) குழுக்கள் வகையினை சார்ந்தவர்கள், அதிகபட்சமான வட்டி மானியம் ₹ 6.5% க்கு தகுதி பெறுகிறார்கள், இதில் கட்டமைக்கப்படும் அல்லது வாங்கப்படும் இடத்தின் அளவு கார்பட்டிற்கு தேவையான பரப்பளவு 60 சதுர மீட்டருக்கு அதிகரிப்பதில்லை (தோரயமாக 645.83 சதுர அடி). வட்டி மானியம் அதிகபட்ச தொகை ₹. 6 இலட்சத்திற்கு கட்டுப்படுத்தப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு இந்த திட்டம் நடுத்தர வருமான பிரிவினருக்கும் (MIG) வழங்கும் வகையில் விரிவாக்கப்பட்டது. இந்த திட்டம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது எ.கா. MIG 1 மற்றும் MIG 2.

MIG 1 வகை:

₹. 6இலட்சத்திற்கு மேல் ஆனால் ₹. 12 இலட்சத்திற்குள் ஆண்டு வீட்டு வருமானம் கொண்ட MIG 1 வகையில் குறிப்பிடப்படுகின்றனர். MIG- 1 வகையில் உள்ள பயனாளர்கள் அதிகபட்ச வட்டி மானியம் 4 % க்கு தகுதி பெறுகிறார்கள், இதில் கட்டமைக்கப்படும் அல்லது வாங்கப்படும் இடத்தின் அளவு கார்பட்டிற்கு தேவையான பரப்பளவு 160 சதுர மீட்டருக்கு அதிகமாக இருப்பதில்லை (தோரயமாக 1,722.23 சதுர அடி). காலவரம்பு 20 ஆண்டுகள் வரைக்கும் கொண்ட ஒரு வீட்டு கடனுக்கு மானியத் தொகை அதிகபட்சம் ₹. 9 இலட்சம் வரை கட்டுப்படுத்தப்படுகிறது.

MIG 2 வகை:

₹. 12இலட்சத்திற்கு மேல் ஆனால் ₹. 18 இலட்சத்திற்குள் ஆண்டு வீட்டு வருமானம் கொண்ட MIG 2 வகையில் குறிப்பிடப்படுகின்றனர். MIG- 2 வகையில் உள்ள பயனாளர்கள் அதிகபட்ச வட்டி மானியம் 3% % க்கு தகுதி பெறுகிறார்கள், இதில் கட்டமைக்கப்படும் அல்லது வாங்கப்படும் இடத்தின் அளவு கார்பட்டிற்கு தேவையான பரப்பளவு 200 சதுர மீட்டருக்கு அதிகமாக இருப்பதில்லை (தோரயமாக 2,152.78 சதுர அடி). காலவரம்பு 20 ஆண்டுகள் வரைக்கும் கொண்ட ஒரு வீட்டு கடனுக்கு மானியத் தொகை அதிகபட்சம் ₹. 12 இலட்சம் வரை கட்டுப்படுத்தப்படுகிறது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா - தகுதிகள்

 1. பயனாளி குடும்பத்தின் அவன்/அவள் எந்த உறுப்பினரின் பெயரிலும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் ஒரு நிரந்தர வீடு இருக்க கூடாது.
 2. திருமணமான தம்பதிகள், கணவன் அல்லது மனைவி அல்லது இருவரும் சேர்ந்து ஒரு மானியம் பெற தகுதி உடையவர்கள்.
 3. இந்திய அரசின் எந்தவொரு வீட்டுத் திட்டத்தின் கீழ் அல்லது மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழும் பயனாளியின் குடும்பம் உதவி கிடைக்க பெற்று இருக்க கூடாது.
பயனாளி

பயனாளியின் குடும்பம் என்பது கணவன், மனைவி மற்றும் திருமணம் ஆகாத பிள்ளைகள்.(திருமண வயது வரம்பில் உள்ள ஒரு வயது வந்த வருமான உள்ள உறுப்பினர் என்பது மத்திய வருவாய் குழு பிரிவில் ஒரு தனி குடும்பமாக கருதப்படலாம்)

கவரேஜ்:

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கு படி அனைத்து சட்ட பூர்வ நகரம், நகர் புறம் அறிவிக்க பட்ட படி திட்டமிடப்பட்ட பகுதியும் அடங்கும்.

PMAY திட்ட விவரங்கள்

மானியம் இணைக்கப்பட்ட கடன் திட்டம் வகை(CLSS) குறைந்த வருமானம் குழு (LIG ) மற்றும் மத்திய வருவாய் குழு (EWS), MIG 1 ** MIG 2 **
குடும்ப வருமானம் தகுதி ( ₹.) ₹. 6,00,000 வரை rs. 6,00,001 to rs.12,00,000 ₹. 12,00,001 முதல் ₹. 18,00,000 வரை
கட்டட உள்ளுறை பரப்பு-அதிகபட்சம் (ச.மீ.) 60 சதுர மீட்டர் 160 சதுர மீட்டர் 200 சதுர மீட்டர்
வட்டி மானியம் (%) 6.5% 4.00% 3.00%
மானியம் கணக்கிடப்படும் அதிகபட்ச கடன் தொகை ₹. 6,00,000 ₹. 9,00,000 ₹. 12,00,000
கடன் நோக்கம் கொள்முதல் / சுய கட்டுமானம் / விரிவாக்கம் கொள்முதல் / சுய கட்டுமானம் கொள்முதல் / சுய கட்டுமானம்
திட்டத்தின் செல்லுபடி காலம் 31/03/2022 31/03/2020 31/03/2020
அதிகமான மானிய தொகை (₹.) 2.67 லட்சம் 2.35 லட்சம் 2.30 லட்சம்
பெண் உரிமையாளர் ஆம் * கட்டாயம் அல்ல கட்டாயம் அல்ல

* பெண் உரிமையாளர் கட்டுமானம் / நீட்டிப்பிற்கு கட்டாயமில்லை

*15.03.2018 தேதியிட்ட திருத்த படி, ஒரு வயது வந்த வருமான உறுப்பினர் (திருமண நிலை பற்றி தேவை இல்லை ) ஒரு தனி குடும்பமாக கருதப்படலாம். மேலும் திருமணமான தம்பதி, கணவன் அல்லது மனைவி அல்லது இருவரும் சேர்த்து மானியம் பெற இந்தத் திட்டத்தின் கீழ் வீட்டு வருமான தகுதிக்கு உட்பட்டு ஒரே வீட்டிற்கு தகுதி பெறுவார்கள்.

**MIG 1 & 2- கடன் 1-1-2017 க்கு அன்று / அல்லது அதற்கு பின்னர் ஒப்புதல் அளிக்க பட வேண்டும்

 1. பயனாளி குடும்பத்தின் ஆதார் எண் (கள்) MIG வகைக்கு கட்டாயமாகும்.
 2. வட்டி மானியம் அதிகபட்சமாக 20 வருட கால அளவு கடன் அல்லது கடன் காலவரை அளவு இதில் எது குறைவோ அதுவரை கிடைக்கும்.
 3. வட்டி மானியம், எச்.டி.எஃப்.சி மூலம் பயனாளி கடன்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். இதன் விளைவாக வீட்டு கடன் மற்றும் சமமான மாதாந்திர தவணை (EMI) குறையும்.
 4. வட்டி மானிய மதிப்பு நிகர தற்போதைய மதிப்பு (என்பிவி) 9 தள்ளுபடி விகிதத்தில் கணக்கிடப்படும்.
 5. குறிப்பிட்ட வரம்புகளுக்கு மேல் கூடுதல் கடன் ஏதேனும் இருந்தால், மானியம் அல்லாத விகிதத்தில் இருக்கும்.
 6. கடன் தொகை அல்லது சொத்தின் மதிப்பில் எந்த இறுதி வரையறையும் இல்லை.

*திட்டம் குறித்த மேலும் விவரங்களுக்கு தயவுசெய்து www.mhupa.gov.in ஐ பார்க்கவும்

குறிப்பு: CLSS நன்மைகளைப் பெறுவதற்கான உங்கள் தகுதி மதிப்பீடு இந்திய அரசாங்கத்தின் முழு விருப்பத்தை பொறுத்தது. இதில் குறிப்பிடபட்டுள்ள உள்ளடக்கங்கள் எல்லாம் இத்திட்டத்தின் கீழ் தகுதியை நிர்ணயிக்கும் அளவுகோல்கள் ஆகும்.

 

கிரெடிட் லிங்க்ட் சப்சிடி திட்டம் (CLSS) யின் கீழ் PMAY சப்சிடியை யார் பெற முடியும்?(CLSS)?

இந்தியாவில் எந்தவொரு பகுதியிலும் ஒரு வீட்டை சொந்தமாக கொள்ளாதவர்கள் மற்றும் குடும்பத்திற்காக வரையறுக்கப்பட்ட விதத்தில் வருமான அளவுக்கு உட்பட்டவர்கள்.

பயனாளியின் குடும்பத்தின் வரையறை என்ன?

பயனாளியின் குடும்பம் என்பது கணவன், மனைவி மற்றும் திருமணம் ஆகாத பிள்ளைகள்.(திருமண வயது வரம்பில் உள்ள ஒரு வயது வந்த வருமான உள்ள உறுப்பினர் என்பது மத்திய வருவாய் குழு பிரிவில் ஒரு தனி குடும்பமாக கருதப்படலாம்)

EWS, LIG மற்றும் MIG வகைகளுக்கான வருமான விதிமுறை என்ன?

தயவுசெய்து மேலே குறிப்பிட்டுள்ள திட்ட விவரங்களை பார்க்கவும்.

இது கிராமப்புறங்களில் உள்ள சொத்துகளுக்கு பொருந்துமா?

இல்லை.

PMAY சப்சிடிக்கு தகுதி பெற பெண் உரிமை கட்டாயமா?

EWS மற்றும் LIG க்காக பெண் உரிமையாளர்கள் அல்லது கூட்டு உரிமை கட்டாயமாகும். எனினும், இது சுய கட்டுமான / நீட்டிப்பு அல்லது MIG வகைகளுக்கு கட்டாயமில்லை.

வட்டி மானியம் பெறுவதற்கான செயல்முறை என்ன?

கடன் வழங்கப்பட்ட பிறகு, தேவையான விவரங்கள் NHB க்கு தரவுகள் மற்றும் பிற ஆவணங்களை சரிபார்க்கும் வகையில் அனுப்பப்படும். ஆவணங்களை சரிபார்த்த பின் NHB தகுதியுள்ளவர்களுக்கு கடன் மானியத்தை அளிக்கிறது.

வட்டி மானியம் எனக்கு எவ்வாறு கிடைக்கும்?

 1. கடன் வழங்கப்பட்ட பிறகு, தேசிய வீட்டு வசதி வங்கியிடம் (NHB) எச்.டி.எஃப்.சி தகுதிவாய்ந்த கடன் பெற்றவர்களுக்கு மானியம் கோரப்படும்.
 2. NHB முழு ஆய்வுக்கு பின்னர் எச் டி எஃப் சி அனைத்து தகுதி வாய்ந்த கடன் பெற்றவர்களுக்கு மானியம் தொகை வழங்கும்.
 3. இந்த மானியம் NPV (நிகர தற்போதைய மதிப்பு) முறையாக 9% தள்ளுபடியில் கணக்கிடப்படும்.
 4. NHB இருந்து மானியத் தொகையைப் பெற்றவுடன், கடன் பெற்றவர்களின் வீட்டு கடன் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது மற்றும் மாத தவணை விகித முறையில் குறைக்கப்படுகிறது.

PMAY சப்சிடி வழங்கப்பட்டபோது சில காரணங்களால் என்னென்ன நடக்கும், வீட்டின் கட்டுமானம் முடிவடைகிறதா?

அத்தகைய சந்தர்ப்பங்களில், மானியம் மீட்டெடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு திருப்பிச் செலுத்த வேண்டும்.

Can a beneficiary family get a loan term beyond 20 years?

ஆம், எச் டி எப் சி கடன் விதிமுறைகளின் படி பயனாளி 20 ஆண்டுகளுக்கு மேலான கடன் பெற முடியும், ஆனால் அதிகபட்சமாக மானியம் 20 ஆண்டுகளுக்கு வரையறுக்கப்படும்.

கடன் தொகை அல்லது சொத்தின் விலையில் ஏதாவது வரம்பு இருக்கிறதா?

இல்லை, ஆனால் மானியம் ஒவ்வொரு வகையிலும் வரையறுக்கப்பட்ட கடன் தொகைக்கு மட்டுப்படுத்த பட்டு இருக்கும். மேலும் கூடுதல் தொகை மானியம அல்லாத வட்டி விகிதத்தில் இருக்கும்.

என் வீட்டுக் கடனை இன்னொரு கடனாளருக்கு மாற்றுவதில் எப்படி வட்டி மானியம் வேலை செய்யும்?

வீடு அமைப்புக் கடனைப் பெற்றுக் கொண்டு, இந்த திட்டத்தின் கீழ் வட்டி மானியத்தை பெற்றவர் ஆனால் பின்னர் மற்றொரு நிறுவனத்திற்கு பேலன்ஸ் டிரான்ஸ்பர் செய்த பயனாளிகள் இந்த திட்டத்தின் பயன்களை மீண்டும் பெற தகுதியற்றவர்கள்.

கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டத்திற்காக(CLSS) நான் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

எந்த எச்.டி.எஃப்.சி கிளையிலும் CLSS இன் கீழ் நீங்கள் வீட்டுக் கடனுக்காக விண்ணப்பிக்கலாம்.

PMAY மானியம் பெறுவதற்கு கூடுதல் ஆவணங்களை நான் கொடுக்க வேண்டுமா?

இல்லை, எச்.டி.எஃப்.சி அலுவலகங்களில் கிடைக்கும் படிவத்தில் ஒரு நிரந்தர வீடு சொந்தமாக இல்லை என்ற சுய அறிவிப்பு தவிர வேறு கூடுதல் ஆவணங்களும் தேவை இல்லை.

NRI கள் PMAY சலுகைகளை பெற முடியுமா?

ஆம்.

சாட் செய்யவும்!